/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிதாக 16 ஓட்டுச்சாவடி உருவாக்க உத்தேசம்
/
புதிதாக 16 ஓட்டுச்சாவடி உருவாக்க உத்தேசம்
ADDED : செப் 17, 2024 05:03 AM
திருப்பூர்: ஓட்டுச்சாவடி பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், ஆயிரத்து, 500க்கு மேல் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிதாக ஓட்டுச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதியில், ஏழும், தெற்கில், மூன்றும், பல்லடத்தில், ஆறும் என, 16 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 2,520ல் இருந்து, 2,536 ஆக உயரும்.
இது தவிர, 21 ஓட்டுச்சாவடிகளில் பிரிவு ஏற்படுத்துதல், இரண்டு ஓட்டுச்சாவடிகளின் கட்டடம் மாற்றுதல், ஒன்பது ஓட்டுச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றுதல் மற்றும் ஐந்து ஓட்டுசாவடிகளின் பெயர் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள் இறுதி செய்யப்பட்டு சென்னை மாநில தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.