/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
9 இடங்களில் மே தின விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு
/
9 இடங்களில் மே தின விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு
9 இடங்களில் மே தின விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு
9 இடங்களில் மே தின விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு
ADDED : ஏப் 27, 2024 11:57 PM
திருப்பூர்:மே தினவிழாவையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில், பொதுக்கூட்டம் நடத்த தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
திருப்பூரில், ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., தொழிற்சங்கங்கள் மற்றும் இணைந்து, தொழிலாளர்கள் பேரணியுடன், பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது, லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், மே தினவிழா கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு மே தினவிழாவில் தொண்டர்கள் பேரணிக்கு அனுமதியில்லை.
இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், 'ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., சார்பில், மே தினவிழா பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. வரும், 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, மாவட்டத்தில், ஒன்பது இடங்களில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. தேர்தல் காலம் என்பதால், பேரணி நடக்க அனுமதியில்லை. திருப்பூர் அரிசிக்கடை வீதி, ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம், காங்கயம் உட்பட ஒன்பது இடங்களில், தொழிற்சங்கங்கள் சார்பில், மே தினவிழா பொதுக்கூட்டம் நடத்தப்படும்,' என்றனர்.

