/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வரும்... ஆனா, வராது!' ஏமாற்றிய கோடை மழை
/
'வரும்... ஆனா, வராது!' ஏமாற்றிய கோடை மழை
ADDED : மே 04, 2024 11:26 PM
பல்லடம்:'வரும்... ஆனா, வராது' என்ற காமெடி வசனத்தை போன்று, பல்லடம் வட்டாரத்தில், இரண்டு நாட்களாக கோடை மழை ஏமாற்றி வருகிறது.
தமிழகம் முழுவதும், கோடை வெப்பம், 100 டிகிரியை கடந்து சுட்டெரித்து வரும் நிலையில், கோடை மழை பெய்து குளிர்வித்திடாதா என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் எழுந்துள்ளது. கோடை மழை பெய்தால் மட்டுமே பரவலாக நினைவு வரும் தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்த நிலையில், விவசாய தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தில், விவசாயிகள் பொதுமக்கள் கோடை மழையை பெரிதும் எதிர்பார்த்தனர்.
பல்லடம் வட்டாரத்தில், நேற்றும், நேற்று முன்தினமும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் சுட்டெரிக்கும் உச்சி வேலையில்கூட, வெயிலின் தாக்கம் தெரியாத அளவுக்கு, வானம் கருக்கலுடன் இருந்தது.
எப்படியும் இன்று கோடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த இரண்டு நாட்களும் இதே போல் வானிலை தோன்றி, விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்து சென்றது. இவ்வாறு, பல்லடம் வட்டார விவசாயிகள், பொதுமக்கள் கோடை மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.