ADDED : ஜூன் 04, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தாராபுரத்தை சேர்ந்தவர் தமிழரசன், 17.
மூலனுாரை சேர்ந்தவர் கவுதம், 17. இருவரும் நண்பர்கள், தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வருகின்றனர். நேற்று மாலை, தமிழரசன், நண்பர் கவுதமை அவரது வீட்டில் 'டிராப்' செய்ய பைக்கில் சென்றார். அப்போது, கொளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, மாடுகளை ஏற்றி வந்த லாரி மீது டூவீலர் மோதியது. இதில், படுகாயமடைந்த கவுதம் பரிதாபமாக அதேயிடத்தில் இறந்தார். தமிழரசன், சிசிச்சை பெற்று வருகிறார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.