/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகத்துக்கு கால்கோள் விழா

ADDED : ஆக 18, 2024 11:46 PM

அவிநாசி:திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மஹா கும்பாபிஷேகம் விழா, செப்., 16ம் தேதி நடைபெற உள்ளது.
ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி டிரஸ்ட் சார்பில் ராஜகோபுரங்கள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜா மாதங்கி, ஸ்ரீமஹா வாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீ பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் ஸ்ரீ கைலாச ஆஸ்ரம மஹா ஸமஸ்தான பீடாதிபதி ஸ்ரீ ஜஜேயந்திர புரி மஹா ஸ்வாமிகள் முன்னிலையில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. நேற்று கோவிலில், கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பணிகளுக்கான கால்கோல் நடும் விழா நடந்தது.
ஸ்ரீ சபேஷ சிவாச்சாரியார்,பெங்களூரூ வாழும் கலை வேதாகம பாடசாலை, வேத விஞ்ஞான மஹா வித்யாபீடம் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், ஜகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, லாவண்யா, நித்தின், வழக்கறிஞர் சத்யநாராயணன், வீரப்பன் அண்ட் கோ மணி, அபெக்ஸ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
---
படம் உள்ளது.