நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காங்கயம், படியூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 40; ஆட்டோ டிரைவர். கடந்த 2018ல், 17 வயதான சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார், சந்தோஷ்குமாரை போக்சோவில் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், சந்தோஷ்குமாருக்கு, 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

