ADDED : பிப் 25, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, தொண்டர் உரிமை மீட்பு அணி சார்பில் (ஓ.பி.எஸ்.,), திருப்பூர் குமரன் சிலை அருகே கொண்டாடப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ஜெ., படத்துக்கு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சென்னிமலை, வீரபாண்டி, நத்தக்காடையூர் பகுதிகளில் நடந்த விழாவில், நிர்வாகிகள் சார்பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

