/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை உறுதி திட்டம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
வேலை உறுதி திட்டம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 16, 2024 11:41 PM

திருப்பூர்;தேசிய வேலை உறுதி திட்டத்தை பலப்படுத்தக்கோரி, மா.கம்யூ., சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சரஸ்வதி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் உள்பட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, திருப்பூர் மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தை பலப்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர். கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு அளித்தனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதோடு, தினசரி கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.