/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 17, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : மாற்றுத்திறனாளிகளுக்கான, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், 20ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 வரை, மக்கள் குறைகேட்பு கூட்டரங்கில் நடக்க உள்ளது.
மாற்றுத்திறனாளிகளில், எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல், பட்டதாரிகள், டிப்ளமோ, தையல் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.