/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு
/
நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு
நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு
நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு
ADDED : மே 04, 2024 11:12 PM
திருப்பூர்:தமிழகம் முழுவதும் சீனியர் நீதிபதிகள் 17 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருவர் இடம் பெற்றுள்ளனர்.
பொதுத் துறை (தனி 'ஏ' பிரிவு) அரசு செயலர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் நீதித்துறையில் பணியாற்றும் மூத்த நீதிபதிகள், 17 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
காலியாக உள்ள பணியிடங்களில் அவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். சென்னை ஐகோர்ட் பதிவாளர் பரிந்துரைகளை ஏற்று இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருவர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவராகப் பணியாற்றும் புகழேந்தி, அவிநாசி சார்பு நீதிபதி சுரேஷ்குமார் ஆகிய இருவர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.