/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறார் இதழ்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சிறார் இதழ்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 23, 2024 12:48 AM
உடுமலை;மடத்துக்குளம் வட்டார அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், சிறார் இதழ்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளிக்கல்வி துறையின் சார்பில், மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கும், வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கும், அவர்களின் படைப்புகளை வெளியிடுவதற்கும் 'புது ஊஞ்சல்', 'தேன்சிட்டு' உள்ளிட்ட சிறார் இதழ்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த இதழ்களை படிப்பதற்கும், அவற்றில் படைப்புகளை அனுப்புவதற்கும் கல்வித்துறையின் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. மடத்துக்குளம் வட்டாரத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நரசிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கருப்புசாமிபுதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சிறார் இதழ்கள் ஒருங்கிணைப் பாளர் கண்ணபிரான், வாசிப்பதன் நோக்கம் குறித்து மாணவர்களுடன் பேசினார்.
தொடர்ந்து இதழ்களில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட படைப்புகளை அனுப்புவது குறித்து விளக்கமளித்தார்.
கடந்தாண்டு சிறார் இதழ்களுக்கு ஓவியங்களை அனுப்பிய, கருப்பசாமிபுதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்மற்றும் மாணவ படைப்பாளர் பேட்ச்களும் வழங்கப்பட்டன.

