/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கபடி போட்டி; அரசு பள்ளிகள் அபார ஆட்டம்
/
கபடி போட்டி; அரசு பள்ளிகள் அபார ஆட்டம்
ADDED : ஆக 23, 2024 02:06 AM

அவிநாசி;அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளியில், அவிநாசி வட்டார அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுகளில் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில், 14 வயது பிரிவு கபடியில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாமிடத்தை, ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி பெற்றது.
பதினேழு வயது பிரிவில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் இரண்டாமிடம். 19 வயது பிரிவில், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, இரண்டாமிடம்.
கைப்பந்து போட்டியில், 14 மற்றும் 17 வயது பிரிவில், அம்மாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா முதலிடம், பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம். 19 வயது பிரிவில், ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., பள்ளி முதலிடம், பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம்.

