/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கபடியில் கலக்கியது வி.கே., அரசு பள்ளி
/
கபடியில் கலக்கியது வி.கே., அரசு பள்ளி
ADDED : ஆக 29, 2024 11:04 PM

திருப்பூர்: திருப்பூர் வடக்கு குறுமைய கபடி போட்டியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவு மூன்றிலும், வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று, பாராட்டு பெற்றது.
திருப்பூர், அவிநாசி ரோடு, டென்னிஸ் கிளப்பில், வடக்கு குறுமைய மாணவர் டென்னிஸ் போட்டி நடந்தது. 14 மற்றும், 19 வயது தனிநபர் மாணவர் பிரிவில், வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவு போட்டியில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி, வி.கே., அரசு பள்ளி அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது.
மாணவர், இரட்டையர் பிரிவில், 14 வயது பிரிவில் ஒரு அணி (ஸ்ரீ சாய் மெட்ரிக்) மட்டும் பங்கேற்றதால், போட்டி கைவிடப்பட்டது. 17 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், வி.கே., அரசு பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், வி.கே., அரசு பள்ளி அணி, 2 -0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.
மாணவியர் 14 வயது, ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டு பிரிவிலும் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி முதலிடம், ஸ்ரீ சாய் மெட்ரிக் 2வது இடம். 17 மற்றும், 19 வயது பிரிவில் முறையே, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம், 17 வயது பிரிவில், இன்பேன்ட்ஜீசஸ் பள்ளி அணி, 19 வயது பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி அணி, 2 வது இடம் பெற்றது.
கபடி போட்டியில்கலக்கிய அரசு பள்ளி
திருப்பூர் வடக்கு குறுமைய மாணவர் கபடி போட்டி, ஜெய்சாரதா பள்ளியில் நேற்று நடந்தது. 14 வயது பிரிவில், குமரானந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை, 17 - 29 என வென்ற வி.கே.,அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 17 வயது பிரிவில், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை, 11 - 25 - 11 எனவும், 19 வயது பிரிவில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை, 35 - 13 எனவும், வென்று மூன்றிலும் முதலிடம் பெற்று அசத்தியது.
முன்னதாக இப்பள்ளியில் நடந்த, மாணவியர் டென்னிகாய்ட் போட்டியில், 14, 17 மற்றும், 19 வயது இரட்டையர் பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி அணியை வென்றது.