ADDED : ஆக 13, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலை உள் விளையாட்டு அரங்கில் நடந்த செகண்ட் இன்டர் நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவிநாசி நாக்குமுரா கியோகுஷின் காய் கான் கராத்தோ பயிற்சி பள்ளி மாணவர்கள் 11 பேர் முதலிடமும், 16 பேர் இரண்டாம் இடமும், 21 பேர் கட்டா பிரிவுகளிலும் பல்வேறு பரிசுகளை வென்றனர்.
இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று அவிநாசியில் நடந்தது. தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் மணி உள்ளிட்டோர் மாணவர்களை வாழ்த்தினர்.

