/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேறும், சகதியுமாக கரையாம்புதுார் சாலை
/
சேறும், சகதியுமாக கரையாம்புதுார் சாலை
ADDED : ஆக 19, 2024 11:26 PM

பல்லடம்:பல்லடம் -- திருப்பூர் ரோட்டில் இருந்து கரையாம்புதுார் செல்லும் ரோடு, திருப்பூர் ரோட்டுடன் பல்லடம் - அவிநாசி செல்லும் ரோட்டை இணைக்கிறது. கரையாம்புதுார் ரோடு மாற்று வழித்தடமாகவும் பயன்பட்டு வருகிறது.
இந்த ரோடு பல இடங்களில் பல்லாங்குழியாக காட்சி தருகிறது. குறிப்பாக, திருப்பூர் ரோட்டில் இருந்து கரையாம்புதுார் செல்லும் சந்திப்பில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில், ரோட்டை சமன்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக செம்மண் கொட்டப்பட்டது. மழை பெய்து வரும் நிலையில், ரோடு, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தட்டு தடுமாறி செல்கின்றனர். விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இந்த ரோட்டை சீரமைக்க வேண்டியது அவசியம்.

