/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருணாநிதி நினைவு தினம்; தி.மு.க.,வினர் மலரஞ்சலி
/
கருணாநிதி நினைவு தினம்; தி.மு.க.,வினர் மலரஞ்சலி
ADDED : ஆக 08, 2024 12:10 AM

திருப்பூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அவரது படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், அவரது படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜன், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வரின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
n தாராபுரத்தில் நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் கட்சியினர் பங்கேற்றனர்.
n காங்கயம், தாராபுரம் ரோடு, களிமேட்டில் மவுன ஊர்வலம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில் நிறைவு பெற்றது. நகர செயலாளர் சேமலையப்பன் தலைமையில் கட்சியினர் பங்கேற்றனர்.
n பொங்கலுாரில் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத் உட்பட பலர் கருணாநிதி படத்துக்கு மலர்துாவி தூவி மரியாதை செலுத்தினர்.