ADDED : மார் 29, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;கொடிங்கியம் ஆர்.கே.ஆர்., ஞானோதயா பள்ளியில், மழலையர் பிரிவுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
கொடிங்கியம் ஆர்.கே.ஆர்., ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிண்டர் கார்டன் வகுப்பு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி வரவேற்றார். என்.ஜி.எம்., கலைக்கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் ராதா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவையொட்டி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். விழாவுக்கான ஏற்பாடு செய்த ஆசிரியர்கள் மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களை, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

