/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணபதி ராஜா வந்தார்! விநாயகர் சதுர்த்தி விழாக்கோலம் பூண்ட திருப்பூர்
/
கணபதி ராஜா வந்தார்! விநாயகர் சதுர்த்தி விழாக்கோலம் பூண்ட திருப்பூர்
கணபதி ராஜா வந்தார்! விநாயகர் சதுர்த்தி விழாக்கோலம் பூண்ட திருப்பூர்
கணபதி ராஜா வந்தார்! விநாயகர் சதுர்த்தி விழாக்கோலம் பூண்ட திருப்பூர்
ADDED : செப் 07, 2024 11:23 PM

திருப்பூர் : திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விநாயகர் கோவில்கள், பிற கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும், விநாயகர் சன்னதிகளிலும், அரச மரத்தடி, தெருமுனை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலக வளாகங்களில் உள்ள விநாயகர் சன்னதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கோவில்களில் அலங்கார மின் விளக்குகள் அமைத்தும், தோரணங்கள், வர்ண காகித அலங்காரங்கள் எனவும் பல்வேறு வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை முதலே அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது.
விநாயகருக்கு விருப்பமான, அவல், பொரி, மோதகம், கொழுக்கட்டை, இனிப்பு உருண்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கணபதி அகவல், விநாயகர் அநுபூதி உள்ளிட்ட விநாயகர் போற்றி பாடல்கள் பாடியும் பக்தர்கள் வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை முதல் இக்கோவில்களில் நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பக்தர்கள் குடும்பத்துடன் திரளாக பங்கேற்று வழிபட்டனர். நேற்று அரசு விடுமுறை என்பதால், ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் வழிபாடு முடிந்து விடுமுறை விடப்பட்டது.