/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் சங்கமம்: ஆக., 8ல் 'நிட்ேஷா' துவக்கம்; முழுவீச்சில் ஆயத்தப்பணிகள்
/
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் சங்கமம்: ஆக., 8ல் 'நிட்ேஷா' துவக்கம்; முழுவீச்சில் ஆயத்தப்பணிகள்
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் சங்கமம்: ஆக., 8ல் 'நிட்ேஷா' துவக்கம்; முழுவீச்சில் ஆயத்தப்பணிகள்
பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் சங்கமம்: ஆக., 8ல் 'நிட்ேஷா' துவக்கம்; முழுவீச்சில் ஆயத்தப்பணிகள்
ADDED : பிப் 28, 2025 12:26 AM

திருப்பூர்; 'நிட் ஷோ - 2025' கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள டாப்லைட் வளாகத்தில், வரும் ஆக., 8ல் துவங்கி, 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. உள்நாடு மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், சீனா உள்பட வெளிநாட்டு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், 'நிட் ஷோ'வில் தங்கள் புதுமையான தொழில்நுட்பங்களை இடம்பெறச்செய்வதற்கான ஸ்டால் புக்கிங்கில் ஆர்வம் காட்டிவருகின்றன.
470 நிறுவனங்கள்தயாரித்த இயந்திரங்கள்
கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:
இந்தாண்டு, 1.20 லட்சம் சதுர அடியில், பிரமாண்ட அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது. 6 அரங்குகள் - 500 ஸ்டால்களில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 470 நிறுவனங்களின் தயாரிப்பிலான பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் முழு இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
புதுமைகள் ஓரிடத்தில்...
ஆடை உற்பத்தி துறையினரின் உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், உற்பத்தி மேம்பாட்டுக்கு ஏதுவாக, புதுமையுடன் கூடிய இயந்திரங்கள் சர்வதேச அளவில் தொடர்ந்து அறிமுகமாகிவருகின்றன. நிட்டிங், எம்ப்ராய்டரி, தையல், பிரின்டிங் என, பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப்ஒர்க் துறைக்கான அனைத்துவகை சமீபத்திய புதுமைகளுடன் கூடிய அதிநவீன இயந்திரங்களையும் 'நிட் ஷோ'வில், ஓரிடத்தில் காணமுடியும்.
பின்னலாடை உற்பத்தி சார்ந்த இயந்திரங்களில் ஏராளமான புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் கண்காட்சி வாயிலாக காட்சிப்படுத்த, இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இப்போதே 80 சதவீத ஸ்டால்கள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. ஏராளமான புதிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும் கண்காட்சியில் இடம் பெறச்செய்ய முயற்சித்துவருகிறோம்.
காட்சிப்படுத்தப்படும்துணி ரகங்கள்
டில்லி, நொய்டாவில் நடந்த 'பாரத்டெக்ஸ்' கண்காட்சியில் பங்கேற்ற துணி உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பல, 'நிட்ஷோ'வில், புதுமையான துணி ரகங்களை காட்சிப்படுத்த தயாராக உள்ளன.
ஆட்டோமேட்டிக் மற்றும் டிஜிட்டல் பிரின்டிங் இயந்திரங்கள், அனைத்து பிரான்டட் நிறுவனங்களில் தையல் இயந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும்.
உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தகத்தில் நிலவிவரும் சவால்களை எதிர்கொள்வதற்கு, செலவினங்களை கட்டுப்படுத்தி, உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிந்து நிறுவுவது காலத்தின் கட்டாயமாகிறது. அந்தவகையில், திருப்பூர் உள்பட நாடு முழுவதும் உள்ள பின்னலாடை உற்பத்தி துறையினரின் தொழில்நுட்ப தேடுதல்களுக்கு 'நிட்ஷோ' கண்காட்சி வரப்பிரசாதமாக அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.