/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனையை வசமாக்கிய கொங்கு மெட்ரிக் பள்ளி
/
சாதனையை வசமாக்கிய கொங்கு மெட்ரிக் பள்ளி
ADDED : மே 12, 2024 06:22 AM

திருப்பூர் : ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
மாணவர் பிரணவ்ராஜ், 494 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம், சபரிநாத், 491 பெற்று இரண்டாமிடம், இளமதி, பிரவீன், ராகுல், சுகந்தன் ஆகியோர், தலா, 490 மதிப்பெண் பெற்று, 3ம் இடம். கணிதத்தில், பிரணவ்ராஜ், பிரகதீஷ், பிரவீன், ராகுல், சவுமியா, ரித்திகா, மனோஜ், இளமதி, தேவதர்ஷன், நிவேதிகா ராணி, கவிப்பிரியா, அகிலன், அறிவியலில் சபரிநாத், ரித்திகா, தேசிகன் ஆகியோர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.
தற்போது பள்ளியில் பிரி கே.ஜி., முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நீட் பயிற்சி வகுப்பும் நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்; அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுக்கு பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், தாளாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாகக் குழு உறுப்பினர் பெரியசாமி, பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.