/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரலிங்கம் ரோடு விரிவாக்கம்; அதிகாரிகள் ஆய்வு
/
குமரலிங்கம் ரோடு விரிவாக்கம்; அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 14, 2025 10:33 PM

உடுமலை; தளி - குமரலிங்கம் ரோடு விரிவாக்கப்பணிகளை, நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், தளி - குமரலிங்கம் ரோடு பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில் பல மடங்கு போக்குவரத்து அதிகரித்த நிலையில், குறுகலான ரோட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. ரோட்டை விரிவுபடுத்த தொடர் கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதையடுத்து, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியில், இடைவழித்தடமாக இருந்த ரோடு, இருவழித்தடமாக விரிவாக்கம் செய்யும் பணியும், சிறு பாலங்கள் திரும்ப கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருப்பூர் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மடத்துக்குளம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மகேந்திரகுமார் உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.