/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாமளாபுரம் பெருமாள் கோவிலுக்கு ஜூலை 12ம் தேதி கும்பாபிேஷகம்
/
சாமளாபுரம் பெருமாள் கோவிலுக்கு ஜூலை 12ம் தேதி கும்பாபிேஷகம்
சாமளாபுரம் பெருமாள் கோவிலுக்கு ஜூலை 12ம் தேதி கும்பாபிேஷகம்
சாமளாபுரம் பெருமாள் கோவிலுக்கு ஜூலை 12ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 30, 2024 12:38 AM

திருப்பூர்:சாமளாபுரத்தில் உள்ள, 1,200 ஆண்டு பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் வரும், 12ம் தேதி நடைபெறவுள்ளது.
சாமளாபுரம் நொய்யல் நதிக் கரையோரத்தில் பூமா தேவி, நீளா தேவி சமேதராக அருள் பாலிக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இலங்கை உள்ள திசை நோக்கி ஆஞ்சநேயர் இடம் பெற்றுள்ளார். கோவிலின் முன் கருட கம்பமும், கருடாழ்வாரும், துவாரபாலகர்களாக ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் மூலவர் சன்னதி முன் இடம் பெற்றுள்ளனர். விஷ்வக்சேனர், ராமானுஜர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி, லட்சுமி ஹயக்கிரீவர், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.
கோவில் வரலாறு
ஏறத்தாழ 1,200 ஆண்டுகளுக்கு முன், சோழர்கள் கொங்கு நாட்டை ஆட்சி செய்த போது இக்கோவில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. வைணவ பெரியவரான ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முன்னரே காஞ்சிபுரத்திலிருந்து வந்த பட்டாச்சாரியார் குடும்பத்தினரே இன்று வரையும் பரம்பரை அறங்காவலர்களாகவும், பூஜை நடத்தியும் வருகின்றனர்.
இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக, இங்குள்ள மூலவர் அருளாளப் பெருமாள் என அழைக்கப்பட்டது, பகல் பத்து, ராப் பத்து என வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டதும் தெரிய வருகிறது. இந்த பகுதி வழியாக உப்பு மற்றும் மிளகு வியாபாரிகள் தங்கள் பொருட்களைக் கொண்டு சென்றதும் அவற்றுக்கு மூட்டைக்கு இவ்வளவு வரி எனக் குறிப்பிட்டு கோவில் கைங்கர்யத்துக்கு வசூலிக்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகள் முன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உற்சவர் சிலை உள்ளிட்ட சிலைகளை முகலாயர் படையெடுப்பின் போது, பக்தர்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று ஆற்றின் கரையோரங்களில் புதைத்து விட்டதாகவும் செவி வழிச்செய்தி உள்ளது.
கோவிலின் மூலவர் சிலை 400 ஆண்டு முன் திருடர்களால் சேதப்படுத்தப்பட்டு அதன் பின்னர் புதிய மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு வாய்ந்த பழமையான இக்கோவில் ஊர்மக்களால் புதுப்பிக்கப்பட்டு கடந்த 1994ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதன்பின், தற்போது கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிேஷகம் வரும், 12ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது.