/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈஸ்வரர், பெருமாள் கோவிலுக்கு 28ம் தேதி கும்பாபிேஷகம்
/
ஈஸ்வரர், பெருமாள் கோவிலுக்கு 28ம் தேதி கும்பாபிேஷகம்
ஈஸ்வரர், பெருமாள் கோவிலுக்கு 28ம் தேதி கும்பாபிேஷகம்
ஈஸ்வரர், பெருமாள் கோவிலுக்கு 28ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : ஆக 03, 2024 06:25 AM

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவில்; ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகிறது.
இரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைப்பெறுகிறது.
அன்று காலை 6:30 முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாளுக்கும், 9:00 முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிேஷக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பாக நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானப்பந்தலுக்கு நேற்று முகூர்த்தக்கால், சிறப்பு பூஜையை தொடர்ந்து நடப்பட்டது.
கோவில் அதிகாரிகள், கோவில் முன்னாள் தலைவர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.