/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஆக 27, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் உள்ளது.
கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. நிறைவுற்ற பின், வரும், 30ம் தேதி நான்கு கால யாக பூஜைகளுடன் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமி தலைமையில், சர்வசாதகர் அருள்மலை தோரணவாவி குமார சிவஞான சிவாச்சாரியார் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.