/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமுதா மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சாதனை
/
குமுதா மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சாதனை
ADDED : மே 06, 2024 11:38 PM

திருப்பூர்;பிளஸ் 2 தேர்ச்சி முடிவில், ஈரோடு மாவட்டம், குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவர் நவீன், 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இவர், தமிழ் - 98, ஆங்கிலம் - 93, கணிதம் - 100, இயற்பியல் - 99, வேதியியல் - 100, உயிரியல் - 100, மதிப்பெண் பெற்றார்.
பள்ளியில் தேர்வெழுதியவர்களில், 5 பேர் கணினி அறிவியலிலும், 5 பேர் வணிகவியலிலும், 2 பேர் கணிதத்திலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களில் தலா ஒருவரும் சதமடித்துள்ளனர்.
மொத்தம், 91 மாணவர்களில் 15 மாணவர்கள் 550 மதிப்பெண், 40 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளியின் துணை தாளாளர் சுகந்தி, பள்ளியின் செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பலர் பாராட்டினர்.