/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொலை முயற்சி வழக்கு வாலிபர் மீது குண்டாஸ்
/
கொலை முயற்சி வழக்கு வாலிபர் மீது குண்டாஸ்
ADDED : ஆக 10, 2024 12:11 AM
திருப்பூர்;சேலம் மாவட்டம், தொப்பக்காட்டை சேர்ந்தவர் ஏழுமலை 39. இவர் கடந்த மே 15ம் தேதி வளம் பாலம், கார்த்திக் கார்டன் அருகில் பழைய இரும்புகளை திருடி கொண்டிருந்தார். அந்த வே-பிரிட்ஜில் வேலை செய்யும் வெங்கமேட்டை சேர்ந்த பாண்டி, 45 என்பவர் தடுக்க முயன்றார். அவரை கல்லால் தாக்கி காயப்படுத்தினார்.
கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். இவர் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து வருவதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.
இந்தாண்டில், 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.