/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதி இல்லை; மூதாட்டி கண்ணீர்
/
அடிப்படை வசதி இல்லை; மூதாட்டி கண்ணீர்
ADDED : ஜூன் 26, 2024 10:53 PM

பல்லடம் : பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்மாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பாத் தாள், 68 ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்தார்.
அவர் கூறியதாவது:
சாமளாபுரம் குளக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், 2022ல் வீடுகள் இடித்து அகற்றப்பட்டு, செம்மாண்டம்பாளையம் கிராமத்தில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டது.
இரண்டு ஆண்டாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் தெருவிளக்குகள் இன்றி இரவு நேரம் கும்மிருட்டில் வசிக்கிறோம். இதுதவிர ரோடு, சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால், விஷ ஜந்துகள் ஊடுருவுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம், மூதாட்டி, கண்ணீர் விட்டபடி, ''எப்படியாவது அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள்,'' என மனு அளித்தார்.