/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை சூழலில் அமைந்த 'லஷ் கிரீன்' வீடு மற்றும் மனை விற்பனை துவக்கம்
/
பசுமை சூழலில் அமைந்த 'லஷ் கிரீன்' வீடு மற்றும் மனை விற்பனை துவக்கம்
பசுமை சூழலில் அமைந்த 'லஷ் கிரீன்' வீடு மற்றும் மனை விற்பனை துவக்கம்
பசுமை சூழலில் அமைந்த 'லஷ் கிரீன்' வீடு மற்றும் மனை விற்பனை துவக்கம்
ADDED : மே 04, 2024 11:20 PM
திருப்பூர்;திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில், எஸ்.எஸ்.ஆர்., ஹவுசிங் மற்றும் புராபர்ட்டீஸ் நிறுவனம் பசுமையான சூழலில் அமைத்துள்ள 'லஷ் கிரீன்' மனைப் பிரிவில் வில்லா மற்றும் வில்லா பிளாட்கள் விற்பனை நடைபெறுகிறது.
சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அருப்புக் கோட்டை ஆகிய பகுதிகளில் வெற்றிகரமான வில்லாக்கள் மற்றும் வில்லா மனைகள் விற்பனையில் எஸ்.எஸ்.ஆர்., ஹவுசிங் மற்றும் புராபர்ட்டீஸ் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் முதன் முறையாக திருப்பூர் அருகே, கணபதிபாளையத்தில் 2.5 ஏக்கர் பரப்பில் வீட்டு மனைகளை லஷ் கிரீன் வில்லாஸ் மற்றும் வில்லா பிளாட்ஸ் என்ற பெயரில் புதிதாக அமைத்துள்ளது. இங்கு இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளுடன் கூடிய அழகிய வில்லாக்கள், 3.5 சென்ட் பரப்பளவு முதல் விற்பனை செய்கிறது.
சுற்றிலும் பசுமையான சூழலில் இது அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு இல்லாத சுற்றிலும் பசுமை நிலங்கள் அமைந்த பகுதி யில் உள்ளது. கேடட் கம்யூனிட்டி வில்லாக்கள்; 24, 30 மற்றும் 33 அடி அகலத்தில் தரமான தார் ரோடு; மனைப்பிரிவு முழுவதும் ஏராளமான பசுமையான மரங்கள்; தெரு விளக்குகள்; அனைத்து மனைகளுக்கும் குழாய் இணைப்பு; மனைப்பிரிவு முழுவதும் முறையான வடிகால் அமைப்பு ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.
மேலும் 24 மணி நேரமும் செக்யூரிட்டிகள், கண்காணிப்பு கேமராக்கள், அழகிய நுழைவாயில் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.
காலபைரவர் கோவில் ஒரு நிமிடப் பயணத்தில் அடையலாம். திருப்பூர் கலெக்டர் அலுவலகம், பல்லடம் பஸ் ஸ்டாண்ட், திருச்சி ரோடு ஆகியன 15 நிமிட பயணத்தில் செல்லலாம். பொங்கலுார் 12 நிமிடம், திருப்பூர் ரயில் நிலையம் 22 நிமிட பயணத்தில் அடையலாம்.
நகரின் நெரிசல் இல்லாத அமைதியான சுற்றுச் சூழலில் அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இங்கு மனைகள் அமைந்துள்ளன.
இந்நிறுவனம் விரைவில் கோவை, கோத்தகிரி மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளிலும் மனைப்பிரிவுகளை அமைத்து விற்பனை செய்யவுள்ளதாக எஸ்.எஸ்.ஆர்., ஹவுசிங் நிர்வாகிகள் தெரிவித்தனர்.