/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பளத்துடன் விடுப்பு வழங்கணும்!
/
சம்பளத்துடன் விடுப்பு வழங்கணும்!
ADDED : ஏப் 09, 2024 11:12 PM
திருப்பூர்;வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நாளன்று, அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் அறிக்கை:
தமிழகத்தில் வரும், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றவேண்டும். அதற்காக, பொதுத்துறை நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மோட்டார்போக்குவரத்து உள்பட அனைத்து நிறுவனங்களும், ஓட்டுப்பதிவு நாளன்று, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்.
தேர்தல் விடுப்பு நாளுக்கு, சாதாரண தொழிலாளிக்கு ஒருநாள் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமல் வழங்க வேண்டும். ஓட்டுப்பதிவு நாளில் பணிக்கு வராத தொழிலாளர் சம்பளத்தில் எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது. தேர்தல் நடக்கும் தொகுதியை சாராத பணியாளர்களுக்கு, அவர்களின் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, ஓட்டுப்பதிவுநாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, 95787 77757, 90033 12844, 99442 58037 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

