sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 முகாம் கற்றுத்தந்த பாடங்கள் ஒரு மாணவனின் அனுபவம்

/

 முகாம் கற்றுத்தந்த பாடங்கள் ஒரு மாணவனின் அனுபவம்

 முகாம் கற்றுத்தந்த பாடங்கள் ஒரு மாணவனின் அனுபவம்

 முகாம் கற்றுத்தந்த பாடங்கள் ஒரு மாணவனின் அனுபவம்


ADDED : ஆக 18, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 18, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், கர்நாடக மாநிலம், மங்களூரு, மகாவீர் கல்லுாரியில், அரசு கல்லுாரிகளில் பயிலும், என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடந்தது. இதில் பங்கேற்று திருப்பூர் திரும்பியுள்ள, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் திவாகர் கூறியதவாது:மொழியறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும். நம் மொழியை எவ்வாறு சைகை மூலம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். உணவை வீணாக்காமல் உண்பதே பெரிய விஷயம். நம் உண்ணும் உணவே மருந்தாகவே வேண்டும். இயற்கை சார் உணவுகளை உண்ண வேண்டும் என்பது கற்றுத்தரப்பட்டது.முகாமில் சட்டம் ஒழுங்கு, சைபர் கிரைம் எனும் தலைப்பில் பேசிய போலீசார் ஒருவர், ''இளைஞர்கள் சமூக வலைதள பக்கங்களை நாடலாம்; தேடலாம். ஆனால், ஐக்கியமாகி, தன்னை மறந்து விடக்கூடாது,' என்றார்.நாம் எந்தநிலையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். குடியேற தடைவிதிக்கப்பட்ட பகுதியில் அதிகளவில் குடியேற்றங்கள் இயற்கையை அழித்து முளைத்ததும், தொடர் மழை பெய்து எச்சரிக்கை விடுத்த போதும், அதை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதும், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படவும், அதிகளவில் உயிரிழப்பு ஏற்படவும் காரணமாக இருந்துள்ளது.வரும் காலத்தில் புயல், வெள்ளம், பேரிடர் காலங்களில் கவனமாக இருக்க அனைத்து தரப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இயன்றவரை எடுத்துக்கூறவும் வேண்டும, என அறிவுரை வழங்கப்பட்டது.நிறைவு நாளில், ஒவ்வொரு மாநிலங்களில் கலாசார நடனம், நாடக நிகழ்ச்சி நடந்தது. கேரளாவின் கதகளி, மோகினியாட்டம், ஆந்திராவின் குச்சிப்புடி, தெலுங்கானாவின் பெரிணி நடனம், தமிழகத்தின் பரதநாட்டியம் நிகழச்சிகள் பாராட்டு பெற்றன.இவ்வாறு, மாணவர் திவாகர் கூறினார்.

---

முகாமில் பங்கேற்று நடனமாடிய மாணவன் திவாகர்.






      Dinamalar
      Follow us