/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை எனும் சாக்கடையில் விழ மாட்டோம்!' மாணவர்கள் உறுதியேற்பு
/
'போதை எனும் சாக்கடையில் விழ மாட்டோம்!' மாணவர்கள் உறுதியேற்பு
'போதை எனும் சாக்கடையில் விழ மாட்டோம்!' மாணவர்கள் உறுதியேற்பு
'போதை எனும் சாக்கடையில் விழ மாட்டோம்!' மாணவர்கள் உறுதியேற்பு
ADDED : ஜூன் 26, 2024 02:32 AM

திருப்பூர்;'போதை எனும் சாக்கடையில் விழ மாட்டோம்' மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 'போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம்' கடைபிடிக்கப்பட்டது.கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மற்றும் மாநகர காவல் துறை மதுவிலக்கு அமலாக்க துறையுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, திருப்பூர் வடக்கு காவல் துணை கமிஷனர் ராஜராஜன் பங்கேற்று பேசுகையில், ''தற்போதைய காலகட்டத்தில், இளைஞர்கள், போதைக்கு அடிமையாகின்றனர். புகையிலை, மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்துவோருக்கு, மீண்டும், மீண்டும் அப்பொருளை பயன்படுத்த துாண்டுகிறது. இதனால், அவர்களின் வாழ்க்கையே சீரழியும்'' என்றார்.மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் பிரேமாதேவி பேசுகையில், ''பெற்றோர், தங்கள் குழந்தைகள் தவறான வழியில் செல்கின்றனரா, என்பதை கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்தும் போது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களால் உணர்ந்துக் கொள்ளவே முடிவதில்லை. போதைக்கு அடிமையானால், அதில் இருந்து மீளவே முடியாது. குடும்ப சூழ்நிலையை அறிந்து, போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.பின், 'போதை எனும் சாக்கடையில் விழ மாட்டேன்; எனது குடும்பத்தை காப்பேன்' என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாணவ பிரதிநிதி நவீன்குமார் நன்றி கூறினார்.---
சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில், திருப்பூர் வடக்கு காவல் துணை கமிஷனர் ராஜராஜன் பேசினார்.