/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வருண பகவானை வேண்டி மகா மந்திரம் உச்சரிப்போம்'
/
'வருண பகவானை வேண்டி மகா மந்திரம் உச்சரிப்போம்'
ADDED : ஏப் 09, 2024 12:31 AM

பல்லடம்;பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசை வழிபாடு நடந்தது. சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது:
தற்போது நாட்டில் மழை இல்லை. பயிர்கள் வாடுகின்றன. நமக்கே வெயிலை தாங்க முடியவில்லை என்றால் பயிர்கள் என்ன செய்யும்? வருண பகவானை அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், எம்பெருமான் யார் அழைத்தாலும் வருவார். ஒருவர் ஒருமுறை சொன்னால் அது மந்திரம். அனைவரும் சேர்ந்து சொல்லும் போது அது மகா மந்திரம்.
அனைவரும் வருண பகவானை வேண்டி மகா மந்திரம் உச்சரிக்க வேண்டும்; நாட்டில் நல்ல மழை பொழிந்து, விவசாயம் செழித்து, அனைவரும் செழிப்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். கடவுள்களை இருகரம் கூப்பி தான் வணங்க வேண்டும்.
இவ்வாறு, பஞ்சலிங்கேஸ்வரர் கூறினார்.
முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு, மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால், பக்தர்கள் நவகிரகங்களுக்கும் பூஜை செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் அருள்பாலித்தார்.

