/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீலகிரி தொகுதி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்போம்! வேட்பாளர் முருகன் பேச்சு
/
நீலகிரி தொகுதி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்போம்! வேட்பாளர் முருகன் பேச்சு
நீலகிரி தொகுதி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்போம்! வேட்பாளர் முருகன் பேச்சு
நீலகிரி தொகுதி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்போம்! வேட்பாளர் முருகன் பேச்சு
ADDED : மார் 31, 2024 12:30 AM

அவிநாசி;நீலகிரி லோக்சபா தொகுதி, அவிநாசி சட்டசபை தொகுதி பா.ஜ., தேர்தல் காரியாலயம் திறப்பு விழா மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சேவூர் ரோடு, சூளை பகுதியில் பா.ஜ., தேர்தல் காரியாலயத்தை பா.ஜ., வேட்பாளர் முருகன் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
நீலகிரி தொகுதியில் வெற்றி மட்டும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும்.
இன்னும், 17 நாட்கள் மட்டும் தான் உள்ளது. அதிகாரம், ரவுடியிசம், பண பலம் உள்ள ஆளுங்கட்சியினர் எதிராளிகளாக உள்ளனர். எதிரிகளை அசுர பலத்துடன் நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி 400 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமராக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
தி.மு.க.,வினர் நடத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் ஹிந்தி மொழி கட்டாயம் திணிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்தியை எதிர்ப்பது தி.மு.க., மட்டும்தான். தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கஞ்சா, கடத்தல், கொலை போன்றவை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமுருகன்பூண்டியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் மேம்பாடு விளையாட்டு துறையின் மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தரம் இல்லத்தில் மருத்துவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் முருகன் பங்கேற்றார்.
முன்னதாக, பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையத்தில், ஊராட்சி துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் பச்சாம்பாளையம், தேவம்பாளையம், நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்த, 500 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

