/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகளை சொல்றோமுங்க... சரி செஞ்சா பரவாயில்லீங்க!
/
குறைகளை சொல்றோமுங்க... சரி செஞ்சா பரவாயில்லீங்க!
ADDED : ஜூலை 02, 2024 01:35 AM

பேட்ஜ்ஒர்க்' அவசியங்க...
திருப்பூர், பங்களா ஸ்டாப் - ராம்நகர் ரோட்டில் 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.
- விஜி, பங்களா ஸ்டாப்.
தெருவிளக்கு சரி செய்யுங்க...
1. திருப்பூர், மங்கலம் ரோடு, வேப்பங்காடு பங்களா வீதியில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை. மாநகராட்சி கண்டு கொள்வதில்லை.
- மனோரஞ்சிதம், கருவம்பாளையம்.
2. திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, பழைய இ.எஸ்.ஐ., மருத்துவமனை சந்திப்பு சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
- அனிதா, எம்.எஸ்., நகர். (படம் உண்டு)
3. திருப்பூர், புஷ்பா தியேட்டர் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன் ரவுண்டானா சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை.
- சண்முகசுந்தரம், புஷ்பா ஸ்டாப். (படம் உண்டு)
மின்கம்பத்தால்
அபாயம் இருக்குதுங்க...
1. திருப்பூர் - பல்லடம் - உடுமலை ரோடு, வடுகபாளையம் ஹால்டல் சாலையில், அடிப்பாகம் சேதமடைந்து, விழும் நிலையில் கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- செல்வக்குமார், வடுகபாளையம். (படம் உண்டு)
2. திருப்பூர், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சாய்ந்த நிலையில் விழ தயாராக மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- செல்வராஜ், வீரபாண்டி (படம் உண்டு)
3. திருப்பூர், வீரபாண்டி, குறிஞ்சிநகரில் அடிப்பாகம் சேதமடைந்து, மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது.
- ஆறுமுகம், குறிஞ்சிநகர். (படம் உண்டு)
4. பொங்கலுார் ஒன்றியம்,கோவை - திருச்சி ரோடு தாயம்பாளையம் பிரிவு அருகே மின் கம்பத்தில் முட்புதர் மூடியுள்ளதால், மின் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- சுப்பிரமணியன், நாச்சிபாளையம்.
தண்ணீரை சேமியுங்க...
திருப்பூர் அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் டீசா ஸ்கூல் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- ரவி, தண்ணீர் பந்தல். (படம் உண்டு)
கால்வாய் சரி செய்யுங்க...
திருப்பூர், பி.என்., ரோடு, சாந்தி தியேட்டர் எதிர்வீதியில் கால்வாயில் குப்பைகள் தேங்கி, அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- ரமணன், பி.என்., ரோடு. (படம் உண்டு)
திருப்பூர், பெருமாநல்லுார் ஊராட்சி, ஆறாவது வார்டில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.
- நடராஜ், பெருமாநல்லுார். (படம் உண்டு)
ரோடு போடுங்க...
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி முதல் குறுக்கு வீதியில் தார் ரோடு போட வேண்டும்.
- சந்திரசேகர், கொங்கணகிரி. (படம் உண்டு)
திருப்பூர், எஸ்.வி., காலனி ஏழாவது வீதியில் குழாய் பதிப்பு பணிக்கு ரோடு தோண்டி, ஆறு மாதமாகிறது. ஜல்லிக்கற்கள் அப்படியே கிடக்கிறது; ரோடு போட வேண்டும்.
- அருண்குமார், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)
ஆய்வு செய்யுங்க...
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியாபாளையத்தில் சமீபத்தில் போடப்பட்ட ரோடு பெயர்ந்து வர துவங்கியுள்ளது. பணியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
- சிவகிருத்திக், பெரியபாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
வெளிச்சம் கிடைச்சதுங்க...
கருவம்பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் சந்திப்பில் தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து இருந்தது. 'தினமலர்' செய்திக்கு பின், புதிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)
உடைப்பு அடைச்சிட்டாங்க...
திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)