நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தாராபுரம் அருகே தெக்காலுாரில் உள்ள மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஒளியேற்றும் விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுலைமான் முன்னிலை வகித்தார்.
துணை தலைவர் தமிழரசன், பொருளாளர் சுப்பிரமணியன், இயக்குனர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். கல்லுாரியில் பயிலும் மாணவியர் விளக்கு ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றனர். மாணவி மாலதி பிரியா தந்தை ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
கல்லுாரி சார்பில் வழங்கப்பட்ட குழு காப்பீடு திட்டம் மூலம் காப்பீடு தொகை பெற்று, மாணவியின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

