/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை கணக்கெடுப்பு 93 சதவீதம் பணி நிறைவு
/
கால்நடை கணக்கெடுப்பு 93 சதவீதம் பணி நிறைவு
ADDED : மார் 08, 2025 11:10 PM
திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்நடை கணக்கெடுப்பு பணியில், 93 சதவீத பணி நிறைவு பெற்றுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். கடந்த, அக்., மாதம் துவங்கிய இப்பணி, கடந்த மாதம், 25ம் தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இம்மாதம் கடைசி வரை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை என மூன்று கோட்டங்களில், 8 லட்சத்து 59 ஆயிரத்து 251 வீடுகளில் கால்நடை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடுகள் அல்லாத வியாபார நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும், கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 247 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகள் துவங்கி, விவசாய உபகரணங்களும் கணக்கெடுக்கப் படுகிறது. 'இதுவரை, 93 சதவீதம் அளவுக்கு கணக்கெடுப்புப்பணி நிறைவு பெற்றிருக்கிறது' என, கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்தனர்.