/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடம் அளவீடு தாமதம்; கால்வாய் பணி முடக்கம்
/
இடம் அளவீடு தாமதம்; கால்வாய் பணி முடக்கம்
ADDED : மே 27, 2024 01:05 AM

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 26வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் முதல் அணைப்பாளையம் வரை 1.5 கி.மீ., துாரத்துக்கு சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு வசதி இல்லாமல் இருந்தது. மாநகராட்சி சார்பில், சாக்கடை கால்வாய் அமைக்க 45 லட்சம் மற்றும் ரோடு அமைக்க 70 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதில் 80 மீட்டர் துாரம் கால்வாய் கட்டும் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரோடு போடும் பணியும் நடைபெறவில்லை. கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. மண் ரோடு என்பதால், சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் செல்ல முடியவில்லை.
உதவிப்பொறியாளர் கூறுகையில், ''விடுபட்ட பகுதியில், உள்ள இடத்தை அளவீடு செய்ய வேண்டி உள்ளது. நில அளவையர் அளவீடு செய்து கொடுத்ததும், விடுபட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் பணி நடைபெறும். தொடர்ந்து, ரோடு பணி நடைபெறும்'' என்றார்.

