ADDED : மார் 29, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;கோவை மத்திய சிறை, பல்லடம் மற்றும் அவிநாசி கிளை சிறைகளில், சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. அவ்வகையில், சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம், கோவை மத்திய சிறை, பல்லடம் மற்றும் அவிநாசி கிளைச் சிறைகளில் மூன்று அமர்வுகளாக இது நடந்தது. நீதிபதிகள் முருகேசன், வடிவேல் மற்றும் சித்ரா ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இதில், 26 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், 5 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, சிறைவாசிகள் ஐந்து பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

