/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லோக்சபா தேர்தல் மாற்றுத்திறனாளிகள் யோசனை
/
லோக்சபா தேர்தல் மாற்றுத்திறனாளிகள் யோசனை
ADDED : மார் 21, 2024 11:39 AM
திருப்பூர்;திருப்பூர் மாற்றுவோம் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை நிறுவனர் மகாதேவன் அறிக்கை:
லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்காளிக்கு விரும்பும் மாற்றத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் செய்துதரவேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடியிலும் சாய்தளம்; மூன்று சக்கர நாற்காலிகள் இருக்கவேண்டும்.
மூன்று சக்கர சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் வரும் மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடி நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கவேண்டும். தபால் ஓட்டு பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளின், ஓட்டு, ரகசியம் காக்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளை அழைத்துச்செல்ல, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

