/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேடி வரும் புதிய வாய்ப்பு! ஒற்றுமையுடன் தக்க வைக்க வேண்டுகோள்
/
தேடி வரும் புதிய வாய்ப்பு! ஒற்றுமையுடன் தக்க வைக்க வேண்டுகோள்
தேடி வரும் புதிய வாய்ப்பு! ஒற்றுமையுடன் தக்க வைக்க வேண்டுகோள்
தேடி வரும் புதிய வாய்ப்பு! ஒற்றுமையுடன் தக்க வைக்க வேண்டுகோள்
ADDED : மே 19, 2024 02:01 AM

திருப்பூர்;'திருப்பூருக்கு, மீண்டும் வாய்ப்பு தேடி வரும் நிலையில், அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வாய்ப்புகளை தக்க வைக்க வேண்டும்' என, 'டீமா' வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, பின்னலாடை உற்பத்தியும், வர்த்தகமும் பல்வேறு கட்டமாக பாதித்தது. பல மாதங்களுக்கு பிறகு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து, திருப்பூருக்கு புதிய பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளது. கூடுதல் ஆர்டர் வர இருப்பதால், அதை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
திருப்பூரில் உள்ள அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களும், ஆர்டர் எடுத்து பேராதரவு கொடுக்க வேண்டும். ஸ்பின்னிங் மில், பேப்ரிகேஷன், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரிங், 'கார்ட்டூன் பேக்கேஜ்', தையல் நுால் உட்பட, அனைத்து உப தொழிலைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளிக்க வேண்டுமென, தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, புதிய ஆர்டர்களை ஏற்க முடியும். இக்காலகட்டத்தில், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள், கட்டண உயர்வு செய்யாமல், இயன்றவரை, குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்க முன்வர வேண்டும்.
நமக்கு போட்டி நாடான வங்கதேசம், திருப்பூரை காட்டிலும், 20 சதவீதம் அளவுக்கு விலையை குறைத்து நிர்ணயம் செய்கிறது. இதுவே, அந்த நாட்டினருக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக உள்ளன.
திருப்பூரில், 10 சதவீதத்துக்கும் குறைவான நிறுவனங்கள் மட்டும், அனைத்து பிரிவுகளுடன் கூடிய பெரிய நிறுனங்களாக உள்ளன. இந்நிறுவனங்கள் மட்டும், வங்கதேச விலைக்கு ஆடை தயாரிக்க முடியும். ஆனால், குறு, சிறு நிறுவனங்கள் ஒன்று இணைந்தால் மட்டுமே தொழிலை நடத்த முடியும்.
புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இக்கட்டான இந்நிலையில், விலையை உயர்த்தாமல், 10 சதவீதம் அளவுக்கு, கட்டணத்தை குறைத்தால், நலிவு நிலையில் இருந்து மீண்டு வர முடியும். இல்லாதபட்சத்தில், புதிய ஆர்டர்கள் விசாரணையுடன் திரும்பி விடும் அபாயம் உள்ளது.
திருப்பூருக்கு, மீண்டும் வாய்ப்பு தேடி வரும் நிலையில், அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வாய்ப்புகளை தக்க வைக்க வேண்டும். 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உதவிட வேண்டும். தமிழக அரசு, மின் கட்டண உயர்வில் இருந்து சலுகை வழங்க வேண்டும்.
மத்திய அரசும், கொரோனா காலத்தில் வழங்கிய போல், 20 சதவீதம் கூடுதல் கடன் வழங்கி உதவ வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உதவி, சரியான நேரத்தில் கிடைக்கும்பட்சத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை, குறுகிய காலத்தில் அடைய முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இக்கட்டான இந்நிலையில், விலையை உயர்த்தாமல், 10 சதவீதம் அளவுக்கு, கட்டணத்தை குறைத்தால், நலிவு நிலையில் இருந்து மீண்டு வர முடியும்

