/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருண பகவான் கருணை; மக்கள் மனம் குளிர்கிறது
/
வருண பகவான் கருணை; மக்கள் மனம் குளிர்கிறது
ADDED : ஆக 22, 2024 12:36 AM

திருப்பூர் : தொடரும் மழையால், திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துவருகிறது. கடந்த 7ம் தேதி மாவட்டத்தில் சராசரியாக 1.01 மி.மீ., லேசான மழை பெய்தது. கடந்த 12ம் தேதி, 18.39 மி.மீ.,க்கு மிதமான மழை; 13ம் தேதி, 4.08 மி.மீ.,க்கு லேசான மழை; 14 ம் தேதி, 0.72 மி.மீ., க்கு மிக லேசான மழை; 19ம் தேதி, 6.33 மி.மீ., லேசான மழையாக பதிவானது.
கடந்த 20ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் கன மழையும்; பத்து இடங்களில் மிதமான மழையும் பதிவானது. அன்று, மாவட்டத்தில் சராசரியாக 26.37 மி.மீ.,க்கு மிதமான மழை பெய்தது.
நேற்றுமுன்தினம் மாலை, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திருப்பூர் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8:00 மணி வரையிலான நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக 10.57 மி.மீ.,க்கு மழை பெய்துள்ளது.
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 41 மி.மீ.,- கலெக்டர் அலுவலக பகுதியில் 38; கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் - 30; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் - 21 மி.மீ., க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது.
அவிநாசியில் 13; அமராவதி அணைப்பகுதியில் 13; தாராபுரம் நல்லதங்காள் ஓடையில் 10; உப்பாறு அணையில் 9; ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதிகளில் 8; மூலனுாரில் 6 மடத்துக்குளம் தாலுகா அலுவலக பகுதிகளில் 3 மி.மீ., க்கு லேசான மழை பெய்தது.
இம்மாதம், கடந்த மூன்று நாட்களாக இடைவெளியின்றி தொடர் மழை பெய்துவருகிறது. வருண பகவான் கருணையால், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது. கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் கிடைக்கிறது.
அமராவதி, திருமூர்த்தி ஆகிய பிரதான அணைகளில் நிர்மட்டம் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக நகர்வதால், பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காலை நேரம் வெயில் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மாலையில் நேரம் தவறாமல் மழை பெய்வதால், மக்கள் மனமும் குளிர்ந்துள்ளது.