/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்
/
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 11, 2024 12:27 AM
திருப்பூர்;காளிபாளையம் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, நாளை நடைபெற உள்ளது.
சாமளாபுரம் பேரூராட்சி, காளிபாளையத்தில், கரியகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா, 10ம் தேதி மங்கள இசை, மகாகணபதி ேஹாம பூஜையுடன் துவங்கியது.
மகாலட்சுமி ேஹாமம், நவகிரக ேஹாமம், முளைப்பாலிகை, தீர்த்தம் எடுத்து வரும் ஊர்வலங்கள் நடந்தன. நேற்று, முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கியது.
இன்று, இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடக்கின்றன. நாளை காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் முடிந்து, சிவகிரி ஆதீன குரு பீடாதிபதி முன்னிலையில், கரியகாளியம்மன் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், முளைப்பாலிகை கரைத்தல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடைபெற உள்ளது.
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, வள்ளிக்கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், ஸ்ரீபண்டரி பஜனை குழுவின் பஜனை, கும்மியாட்டம், பாரம்பரிய கம்பத்தாட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.