/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
/
பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
ADDED : செப் 05, 2024 12:34 AM
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, இன்று நடைபெற உள்ளது.
வேலம்பாளையத்தில் அமைந்துள்ள, பிளேக் மாரியம்மன், காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. நாடி வரும் பக்தர்களின் துயர் துடைக்கும் தாயாகி பிளேக் மாரியம்மன் கோவிலில், திருப்பணி செய்து, கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.
விநாயகர், பிளேக் மாரியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கன்னிமார், கருப்பராயன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், 28 ம் தேதி முளைப்பாரி போடப்பட்டது. கடந்த 2 ம் தேதி மங்கள இசையுடன் கணபதி ேஹாமம் நடந்தது.
கடந்த 3ம் தேதி, மாலை, கரியகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து, மாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின.
நான்கு கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, இன்று, கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. இன்று காலை, 7:45 மணிக்கு துவங்கி, 8:45 மணிக்குள், மூலவர் விமான கும்பாபிேஷகம், பிளேக் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் முன்னிலையில், நடக்கும் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்று அருள்பெறுமாறு, திருப்பணி கமிட்டி ஊர் பொதுமக்கள், பிளேக் மாரியம்மன் திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.