/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: அலட்சியத்தில் வாரியம்; மக்கள் அதிருப்தி
/
கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: அலட்சியத்தில் வாரியம்; மக்கள் அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: அலட்சியத்தில் வாரியம்; மக்கள் அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: அலட்சியத்தில் வாரியம்; மக்கள் அதிருப்தி
ADDED : மார் 06, 2025 12:12 AM

உடுமலை:
கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பை சரிசெய்ய, குடிநீர் வடிகால் வாரியத்தினர் அலட்சியம் காட்டுவதால், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
உடுமலை திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட, 23 ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அணையிலிருந்து நீரேற்று நிலையம் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் பெறப்பட்டாலும், பிரதான குழாய் உடைப்பு உள்ளிட்ட தொடர் பிரச்னைகளால், கிராமங்களில், வினியோகம் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வினியோக பிரச்னைகளுக்கு தீர்வு காண, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் தரப்பில் காட்டப்படும் அலட்சியம், பல்வேறு கிராமங்களை பாதித்து வருகிறது.
உதாரணமாக, பொட்டையம்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, கொங்கல்நகரம், புதுப்பாளையம், விருகல்பட்டி, அனிக்கடவு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட பிரதான குழாய், கொங்கல்நகரம் அருகே உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் வாயிலாக பல முறை புகார் தெரிவித்தும், குடிநீர் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், கடந்த ஒரு வாரமாக புதுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், வினியோகம் பாதித்து, மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கூட்டுக்குடிநீர் திட்ட வினியோக பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் வாரியம் உள்ளடக்கிய சிறப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், இந்த கோடை சீசனில் வினியோகம் பாதித்து பல்வேறு பிரச்னைகள் அதிகரிக்கும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப் பது அவசியமாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.