/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகன நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
/
வாகன நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
வாகன நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
வாகன நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 07, 2024 03:11 AM

உடுமலை:உடுமலையில், பிரதான ரோடுகளில், ஆக்கிரமிப்பு, வாகன நிறுத்தும் மையங்களாக மாற்றப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை நகரின் பிரதான ரோடுகளாக, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு மற்றும் ராஜேந்திரா ரோடுகள் உள்ளன.
இந்த ரோடுகளில், அமைந்துள்ள வணிக வளாக கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், 'பார்க்கிங்' வசதி செய்யப்படாமல், கட்டப்பட்டுள்ள கடைகள் காரணமாக, அங்கு வரும் வாடிக்கையாளர்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
அதிலும், தளி ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே, பொள்ளாச்சி ரோடு மற்றும் பைபாஸ் ரோடுகள் வாகனங்கள் நிறுத்தும் மையங்களாக மாறியுள்ளன.
அதே போல், பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர், பழநி ரோடு பகுதிகளில், சரக்கு வாகனங்கள், கார்கள் ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
ராஜேந்திரா ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, கச்சேரி வீதி, சீனிவாசா வீதி மற்றும் கல்பனா ரோடு பகுதிகளிலும், ரோடுகளில், அதிகளவு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
இதனால், உடுமலை ரோடுகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு தீர்வு காண போக்குவரத்து போலீசார், ரோடுகளில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்.
விதி மீறி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.