/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் திருட முயன்ற ஆசாமி; சாக்கடைக்குள் விழுந்து சிக்கினார்
/
வீடுகளில் திருட முயன்ற ஆசாமி; சாக்கடைக்குள் விழுந்து சிக்கினார்
வீடுகளில் திருட முயன்ற ஆசாமி; சாக்கடைக்குள் விழுந்து சிக்கினார்
வீடுகளில் திருட முயன்ற ஆசாமி; சாக்கடைக்குள் விழுந்து சிக்கினார்
ADDED : மார் 15, 2025 12:18 AM

பல்லடம்; பல்லடம் அருகே, வடுகபாளையம் காளியப்பா நகர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட திருட்டு ஆசாமி ஒருவர், அடுத்தடுத்து உள்ள, வீடுகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். கடைசியாக, குடியிருப்பு ஒன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஆசாமி, அங்கிருந்த உண்டியலில் இருந்த, 5 ஆயிரம் ரூபாயை திருடினார்.
தொடர்ந்து, பீரோவை திறக்க முயன்ற போது, பீரோ கதவு ஏற்கனவே சேதமடைந்திருந்த நிலையில், பெயர்ந்த கதவுடன் கீழே விழுந்தார். இதையடுத்து, உஷாரான குடும்பத்தினர் திருட்டு ஆசாமியை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
இதற்குள், காம்பவுண்ட் சுவரில் எட்டி குதித்து, சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்தார். இதில், காயம் ஏற்பட்டு எழ முடியாத நிலை ஏற்பட்டது. ஆசாமியை பிடித்து, பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகையில், 'பட்டுக்கோட்டையை சேர்ந்த குணசீலன், 53. தஞ்சை, திருச்சி போலீஸ் ஸ்டேஷனில்களில் இவர் மீது, 10 திருட்டு வழக்குகள் உள்ளன.
கடந்த 2 நாளாக, கட்டட வேலை செய்து வருவதாக கூறி, பல்லடத்தில் தங்கி இருந்த இவர், இரும்பு கம்பி, முகமூடியுடன், திருட்டில் ஈடுபட தயாரானார். அதன்படி, அதிகாலையில் திருட்டு முயற்சியில், கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து பொதுமக்களிடம் பிடிபட்டார்,' என்றனர்.