/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மன வளக்கலை அறக்கட்டளை இன்று முப்பெரும் விழா
/
மன வளக்கலை அறக்கட்டளை இன்று முப்பெரும் விழா
ADDED : ஏப் 27, 2024 11:54 PM
திருப்பூர்:திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் முப்பெரும்விழா இன்று மாலை நடக்கிறது.
திருப்பூர் ஆலங்காட்டில், திருப்பூர் மன வளக்கலை மன்ற அறக்கட்டளை செயல்படுகிறது. இதன் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, அறங்காவலர்கள் குடும்ப விழா மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று மாலை 5:30 மணிக்கு, ஹார்வே குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். அறக்கட்டளை ஆலோசகர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
ராம்ராஜ் காட்டன் நாகராஜ், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம், ஸ்கை சுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசவுள்ளனர். ஆன்மிக சொற்ெபாழிவாளர் சுகிசிவம், 'தொண்டாற்றி இன்பம் காண்போம்' என்ற தலைப்பில் பேசவுள்ளார்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

