/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் நாளன்று தொழிலாளருக்கு சம்பளத்துடன் விடுப்பு கட்டாயம்
/
தேர்தல் நாளன்று தொழிலாளருக்கு சம்பளத்துடன் விடுப்பு கட்டாயம்
தேர்தல் நாளன்று தொழிலாளருக்கு சம்பளத்துடன் விடுப்பு கட்டாயம்
தேர்தல் நாளன்று தொழிலாளருக்கு சம்பளத்துடன் விடுப்பு கட்டாயம்
ADDED : ஏப் 18, 2024 04:23 AM
திருப்பூர் : ஓட்டுப்பதிவு நாளில், பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது.
மேலும், தேர்தல் நடக்கும் தொகுதியை சாராத பணியாளர்களுக்கும், சொந்த தொகுதிக்கு சென்று ஓட்டளிக்க வசதியாக, ஓட்டுப்பதிவு நாளான 19ம் தேதி (நாளை) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கட்டுப்பாட்டில், 19ம் தேதி மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர், தேர்தலில் ஓட்டளிக்கும் பொருட்டு, சம்பளத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் செய்யலாம்.
தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் (95787 77757), தொழிலாளர் துணை ஆய்வர் லட்சுமிகாந்தன் (90033 12844), தொழிலாளர் உதவி ஆய்வர் பேச்சிமுத்து (99442 58037) ஆகியோரிடம், ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் செய்யலாம்.
புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தொழிலாளர் துறை உதவி கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

