ADDED : மே 04, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:மங்களூரு மார்க்கத்தில் ரயில்பாதை மேம்பாட்டு பணி நடப்பதால், மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் இயக்கம் ஏழு நாட்களுக்கு மாற்றப்படுகிறது
அதன்படி, இம்மாதம், 7, 10, 21, 24 மற்றும், 28ம் தேதி, ஜூன், 4 மற்றும், 7ம் தேதி, இரவு, 11:45 மணிக்கு புறப்படும் மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22638) மங்களூருவுக்கு பதில், உல்லாலில் இருந்து, 11:51 மணிக்கு புறப்படும். அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு அட்டவணையில் உள்ள நேரத்துக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.