/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மார்க்கெட் வளாகம் திறப்பு: வியாபாரிகள் எதிர்பார்ப்பு
/
மார்க்கெட் வளாகம் திறப்பு: வியாபாரிகள் எதிர்பார்ப்பு
மார்க்கெட் வளாகம் திறப்பு: வியாபாரிகள் எதிர்பார்ப்பு
மார்க்கெட் வளாகம் திறப்பு: வியாபாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 02, 2024 05:13 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகா சபைக் கூட்டம் நேற்று நடந்தது. துணை தலைவர் ஆறு முகம் சங்க கொடியை ஏற்றினார். சண்முகராஜ் வரவேற்றார்.
பாலசுப்ரமணியம், தம்பி குமாரசாமி முன்னிலை வகித்தனர். தலைவர் தங்கமுத்து தலைமை வகித்து பேசினார். செயலாளர் மனோகர் ஆண்டறிக்கை வாசித்தார்; பொருளாளர் சம்பத் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் புதிய மார்க்கெட் வளாகத்தில் சில மாறுதல்களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவற்றின் மீது நடவடிக்கை உரிய மாறுதல்களை, அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் ஏற்படுத்த வேண்டும்.
கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டு நான்காண்டாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே வாடகை நிர்ணயித்து கடைகளை வழங்க வேண்டும். வாடகை வசூலிக்கும் பொறுப்பை சங்கத்திடம் வழங்க வேண்டும்.
பல்லடம் ரோட்டில் ஆக்கிரமித்து அமைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவது போல், மார்க்கெட் வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்கவும், வங்கி கடன் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.